/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.25 லட்சம் மோசடி ஆவடி நபர் கைது
/
ரூ.25 லட்சம் மோசடி ஆவடி நபர் கைது
ADDED : ஜூன் 18, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்:வெங்கல் அருகே, கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன், 65. அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். ஆவடி வைஷ்ணவி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத், 50. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கமிஷன் அடிப்படையில் விற்கும் தொழில் செய்து வருகிறார். கோபிநாத் கொமக்கம்பேடு கிராமத்திற்கு சென்று வந்த நிலையில், ராகவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
புதிதாக வீடு வாங்கித் தருவதாக கோபிநாத், ராகவனிடம் கூறியுள்ளார். 2018ல் முதல் சிறுக, சிறுக பணம் செலுத்தி 25 லட்சம் ரூபாய் தந்துள்ளார். ஆனால் புதிய வீடு வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து ராகவன் வெங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார், கோபிநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.