/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
/
கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
ADDED : மே 25, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:கரியமாணிக்க பெருமாள் கோவிலில் நடந்த வரும், 10 நாள் பிரம்மோற்சவ விழாவில், கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து உற்சவரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவிலில் கடந்த, 20ம் தேதி, வார்ஷிக பிரம்மோற்சவ விழா துவங்கியது.
தினமும், மாலை, 4:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, 5:30 மணிக்கு உற்சவர் யாளி, சேஷ, சந்திரபிரபை, பல்லக்கிலும், நேற்று கருட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.