/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதி கேட்டு குடியிருப்புவாசிகள் மனு
/
அடிப்படை வசதி கேட்டு குடியிருப்புவாசிகள் மனு
ADDED : ஆக 13, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது சாய்பாபா நகர். அந்த குடியிருப்பு பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் பலர் அங்கு புதிதாக வீடுகள் நிறுவி வருகின்றனர். அங்கு, குடிநீர், சாலை, கால்வாய், குப்பை தொட்டி, தெரு விளக்கு, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்தில் வசித்து வருகின்றனர்.
அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

