/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சியில் ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் மனு
/
பேரூராட்சியில் ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் மனு
பேரூராட்சியில் ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் மனு
பேரூராட்சியில் ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் மனு
ADDED : ஜூன் 07, 2024 08:35 PM
திருவள்ளூர்:பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளை, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருத்தணி தாலுகா காக்களூர், ஸ்ரீ காவேரி ராஜபேட்டை, பொம்மராஜ் பேட்டை, பெருமாநல்லூர், ஈச்சந்தோப்பு, ஜங்காளப்பள்ளி, பாண்டரவேடு ஆகிய ஊராட்சிகளை பொதட்டூர்பேட்டை பேரூராட்சி உடன் இணைக்கப்பட உள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ., நரசிம்மன் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஊரகவளர்ச்சித் துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவை பெற்ற ஊராட்சி இணை இயக்குனர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
*திருவள்ளூர் வட்டம், திருப்பாச்சூர் பெரியகாலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருப்பாச்சூர் பெரிய காலனி ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிகிறோம். ஏற்கனவே மூன்று முறை இங்கு, சவுடு மண் குவாரி அனுமதிக்கப்பட்ட நிலையில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலத்தில் தண்ணீர் தேங்க முடியாத நிலை உள்ளது.
கடந்த காலங்களில் சவுடு மண் லாரிகள் வேகமாக சென்றதில், பலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, எங்கள் கிராம ஏரியில் சவுடு மண் எடுக்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்ற, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.