/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மையார்குப்பம் சாலையை சீரமைக்க கோரி மனு
/
அம்மையார்குப்பம் சாலையை சீரமைக்க கோரி மனு
ADDED : பிப் 24, 2025 11:57 PM
ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஊராட்சியில், 15,000 பேர் வசித்து வருகின்றனர். அம்மையார்குப்பம் பஜார் சாலை வழியாக, ராகவ நாயுடு குப்பம், பாலாபுரம், கதனநகரம், மகன் காளிகாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு தார் சாலை வசதி உள்ளது.
இந்த சாலை வழியாக தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.பேட்டைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன், அம்மையார்குப்பம் பஜார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
இதில், கழிவுநீர் கால்வாயும் இடித்து நாசம் செய்யப்பட்டுள்ளது. விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் வியாபாரிகள் மற்றும் பகுதிவாசிகளின் நலன் கருதி, கிராம பசுமை இயக்கம் சார்பில், ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சாலையை விரிவாக்கம் செய்யவும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

