/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதிரிவேடு காவலர் குடியிருப்பின் பரிதாபம் புதிய கட்டடம் எப்போது?
/
பாதிரிவேடு காவலர் குடியிருப்பின் பரிதாபம் புதிய கட்டடம் எப்போது?
பாதிரிவேடு காவலர் குடியிருப்பின் பரிதாபம் புதிய கட்டடம் எப்போது?
பாதிரிவேடு காவலர் குடியிருப்பின் பரிதாபம் புதிய கட்டடம் எப்போது?
ADDED : ஜூலை 18, 2024 01:09 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் நிலையத்தின் பின்புறம், கடந்த 2000ம் ஆண்டில் காவலர் குடியிருப்பு வளாகம் திறக்கப்பட்டது.
அதில், 12 காவலர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், இரு தலைமை காவலர்கள், எஸ்.ஐ.,க்கு தனி வீடுகளும் உள்ளன.
முறையான பராமரிப்பு இன்றி குடியிருப்பு வீடுகள் பழுதானதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்த லாயக்கற்ற கட்டடம் என அறிவிக்கப்பட்டது. காவலர்கள் ஓய்வெடுக்க மட்டும் அந்த குடியிருப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பாதிரிவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெளி இடங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, அலைச்சல் இன்றி போலீசார் பணி மேற்கொள்ளும் வகையில், பழைய குடியிருப்பு கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.