/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னையில் 'பார்முலா 4 ரேஸ்' ஆக., 31ல் நடத்த திட்டம்?
/
சென்னையில் 'பார்முலா 4 ரேஸ்' ஆக., 31ல் நடத்த திட்டம்?
சென்னையில் 'பார்முலா 4 ரேஸ்' ஆக., 31ல் நடத்த திட்டம்?
சென்னையில் 'பார்முலா 4 ரேஸ்' ஆக., 31ல் நடத்த திட்டம்?
ADDED : ஜூலை 21, 2024 06:36 AM
சென்னை: சென்னையில், 'பார்முலா - 4' கார் பந்தயம், வரும் ஆக., 31 முதல் செப்., 1ம் தேதி வரை நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்புகளுடன் இணைந்து, 'பார்முலா ரேசிங் சர்க்யூட் எப் 4' எனும் கார் பந்தய போட்டிகளை, கடந்த டிச., 9, 10ம் தேதிகளில் நடத்த இருந்தது.
சென்னை தீவுத்திடல் அருகில் நடக்க இருந்த இப்போட்டிக்காக, தமிழக அரசும் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பந்தயத்திற்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்தியது. 'மிக்ஜாம்' புயல் மழை காரணமாக, தேதி அறிவிப்பின்றி போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், சென்னையில் போட்டி நடத்துவதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில நிபந்தனைகளுடன் போட்டிகள் நடத்த, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், சென்னையில் வரும் ஆக., 31 முதல் செப்., 1ம் தேதி வரை, 'பார்முலா 4' போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, நேற்று தகவல் வெளியானது.
இது தொடர்பான தகவல்கள், இணையதளங்களில் பரவியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்னையில் ஆகஸ்ட் மாதம் ரேஸ் நடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும், அரசு சார்பில் வெளியிடவில்லை' என்றனர்.
சென்னையில் முதல் முறையாக கார் பந்தயம் நடக்க இருப்பதால், விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில், பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.