/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக பல்கலை 'பீச் வாலிபால்' இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு
/
உலக பல்கலை 'பீச் வாலிபால்' இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு
உலக பல்கலை 'பீச் வாலிபால்' இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு
உலக பல்கலை 'பீச் வாலிபால்' இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : மே 23, 2024 11:40 PM

சென்னை, உலக பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய பல்கலை அணிக்கான தேர்வு போட்டியில், 50க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
உலக பல்கலைகளுக்கு இடையிலான பீச் வாலிபால் போட்டிகள், பிரேசிலில் உள்ள ஜெனிரோவில், வரும் செப்., 2ல் துவங்கி, 9ம் தேதி வரை நடக்க உள்ளன.
இதில் பீச் வாலிபால், மல்யுத்தம் உள்ளிட்ட பலவித கடற்கரை போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில், இந்திய பல்கலை வீரர்கள் தேர்வு போட்டிகள், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி கடற்கரையில் நடக்கின்றன.
இதில், நாடு முழுதும் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்து, 50க்கும் மேற்பட்ட இருபாலரும் பங்கேற்றனர்.
இதில், தலா 10 வீரர் - வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டு, உலக போட்டியில் இந்திய பல்கலை சார்பில் பங்கேற்கின்றனர்.
நேற்று மாலை தேர்வு செய்யப்பட்ட வீரர்களை, கோட்டயத்தில் உள்ள எம்.ஜி., பல்கலையின் பினு ஜார்ஜ் வர்கிஷ், இந்திய பல்கலை கூட்டமைப்பின் கவுரவ் ராய், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மோகனகிஷ்ணன், அமிட் பல்கலையின் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.
இதைத்தொடர்ந்து இன்று முதல், பீச் மல்யுத்தம் போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகளும் நடக்கின்றன.