/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி சிப்காட்டில் விளையாட்டு மைதானம்
/
கும்மிடி சிப்காட்டில் விளையாட்டு மைதானம்
ADDED : மார் 04, 2025 01:06 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில்,4 ஏக்கர் பரப்பளவில், விளையாட்டுமைதானம் ஏற்படுத்த, 2.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில்,220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வளாகத்திற்குள், கிரிக்கெட் மைதானம்ஏற்படுத்த, உற்பத்தியாளர்கள் சங்கம்சார்பில், சிப்காட் நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதை ஏற்ற சிப்காட் நிர்வாகம், ஐந்தாவது குறுக்கு சாலையில், 4 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி இடத்தை தேர்வு செய்தது.
அதில், பிரதானமாக கிரிக்கெட் மைதானமும், அதனுடன் கைப்பந்து, கூடைபந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் நிறுவப்பட உள்ளது.
இவற்றின் கட்டுமான பணிக்காக, சிப்காட் நிர்வாகம் சார்பில், இரண்டு கோடியே 27 லட்சத்து 68,௦௦௦ ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், பணிகள் விரைவில் மேற்கொள்ள இருப்பதாக சிப்காட்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.