/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம்!: கடந்த ஆண்டை விட 1.15 சதவீதம் குறைவு
/
திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம்!: கடந்த ஆண்டை விட 1.15 சதவீதம் குறைவு
திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம்!: கடந்த ஆண்டை விட 1.15 சதவீதம் குறைவு
திருவள்ளூரில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம்!: கடந்த ஆண்டை விட 1.15 சதவீதம் குறைவு
ADDED : மே 07, 2024 06:43 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், 91.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டு பெறப்பட்ட, 92.47 சதவீதத்தை விட, 1.15 சதவீதம் குறைவு.
திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் - ஏப்., வரை நடந்தது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தம், 244 பள்ளிகளைச் சேர்ந்த, 11,863 மாணவர், 13,762 மாணவியர் என, மொத்தம் 25,625 பேர் தேர்வு எழுதினர்.
இதற்காக, மாவட்டம் முழுதும் மொத்தம், 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள், 18 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்படை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இத்தனிப்படையினர், தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 10,410 மாணவர், 12,991 மாணவியர் என, மொத்தம் 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 91.32 சதவீதம்.
சரிவு
கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில் மொத்தம், 371 பள்ளிகளைச் சேர்ந்த, 20,101 மாணவர், 21,433 மாணவியர் என, மொத்தம் 41,534 பேர் தேர்வு எழுதினர்.
இதில், 17,939 மாணவர், 20,469 மாணவியர் என, மொத்தம் 38,408 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.47 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு, 91.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட, 1.15 சதவீதம் குறைந்து விட்டது.
கொரோனா தொற்று காலத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் படிப்படியாக குறைந்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
l திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் 27ம் இடத்தில் இருந்தது. நடப்பாண்டு, 36வது இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டது
l மாவட்டத்தில் உள்ள 102 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஐந்து பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வாய் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி.
புதிய அலமாதி அரசு மேல்நிலை பள்ளி, ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, பேரம்பாக்கம் மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் வேப்பம்பட்டு மாதிரி பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன
l பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 19 மாணவர்களில், 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
l புழல் சிறையில் தேர்வெழுதிய 35 கைதிகளில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் தேர்வெழுதிய 26 ஆண் கைதிகளில், 24 பேர் தேர்ச்சி பெற்றனர்
விசாரணை சிறையில் தேர்வெழுதிய, ஆறு ஆண் கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். மகளிர் சிறையில் தேர்வெழுதிய, மூன்று பெண்களில், இரண்டு பேர் தேர்ச்சி பெற்றனர்
l தேர்வு எழுதிய மாணவர் 87.75 சதவீதம், மாணவியர் 94.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு மாணவர், 89.2 சதவீதம், மாணவியர் 95.5 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவியரே தேர்ச்சி சதவீதத்தில் முன்னிலையில் உள்ளனர்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
பள்ளி வகை தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் கடந்த ஆண்டு வித்தியாசம்
அரசு பள்ளி 11,624 9,871 84.92 86.22 1.30 - குறைவு
நகராட்சி 78 64 82.01 86.46 4.41 - குறைவு
ஆதிதிராவிடர் 295 227 80.47 80.83 0.36 - குறைவு
நிதி உதவி 2,055 1,964 85.57 86 10.03 - குறைவு
சி.பி.எஸ்.சி., 124 123 99.19 100 0.71 - குறைவு
பகுதி நிதி உதவி 1,098 1,001 91.17 94.26 3.06 - குறைவு
சுயநிதி 1,117 1,064 96.26 95.49 0.77 - அதிகம்
மெட்ரிக் 9,234 9,087 98.41 0.65 - குறைவு
மொத்தம் 25,625 23,401- 91.32 92.47 1.15 - குறைவு