/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் குடிநீரின்றி போலீசார் தவிப்பு
/
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் குடிநீரின்றி போலீசார் தவிப்பு
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் குடிநீரின்றி போலீசார் தவிப்பு
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் குடிநீரின்றி போலீசார் தவிப்பு
ADDED : நவ 08, 2024 08:54 PM
திருவாலங்காடு:கனகம்மாசத்திரத்தில் காவல் நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பஜார் பகுதியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காவல் நிலைய கட்டடம் பலமிழந்து பாழுதடைந்தது. இதனால் 2014ல் புதிய காவல் நிலைய கட்டடம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி கட்டடப்பட்டது.
தற்போது இந்த காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஐந்து எஸ்.ஐ.க்கள், ஆறு எஸ்.எஸ்.ஐ., க்கள், 16 கான்ஸ்டபிள் என மொத்தம் 28 போலீசார் பணியில் உள்ளனர். தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையம் வந்து செல்கின்றனர்.
கடந்த ஒருவாரமாக காவல் நிலையத்தில் குடிநீர் ஏற்றும் பம்ப் மற்றும் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் போலீசார் குடிநீரின்றியும், கழிப்பறைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்புகின்றனர்.
மக்களின் பிரச்னைகளை தீர்க்க, 24 மணி நேரமும் பணியாற்றும் காவலர்களுக்கு குடிநீர் இல்லாத நிலைமையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே காவல் நிலையத்தில் சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.