/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடீரென கூடிய மாணவர்கள் காவல் ஆய்வாளர் அறிவுரை
/
திடீரென கூடிய மாணவர்கள் காவல் ஆய்வாளர் அறிவுரை
ADDED : ஆக 01, 2024 11:21 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே காலி மைதானத்தில் நேற்று மாலை கல்லுாரி மாணவர்கள் கூட்டமாக சேருவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., அழகேசன். திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவர்கள் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் சென்னை பச்சையப்பா கல்லுாரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.
மாணவர்கள் அனைவரும் கல்லுாரிக்கு புறநகர் மின்சார ரயிலில் செல்லும்போது அனைவரும் ஒரே ரயிலில் ஒற்றுமையுடன் செல்ல வேண்டும்.
அப்படி சென்றால் தான் நம்மிடம் எந்த கல்லுாரி மாணவர்களும் தகராறில் ஈடுபடமாட்டார்கள் என்பது குறித்து ஆலோசனை நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மாணவர்களிடம் நீங்கள் நன்றாக படித்து நல்ல முறையில் வாழ வேண்டும்.
தேவையில்லாமல் கூட்டமாக பேசி எடுக்கும் முடிவுகள் உங்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் என அறிவுரை வழங்கி மாணவர்களை அனுப்பி வைத்தார்.