/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் நிலையம் முற்றுகை
/
ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் நிலையம் முற்றுகை
ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் நிலையம் முற்றுகை
ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் நிலையம் முற்றுகை
ADDED : பிப் 24, 2025 01:45 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; முன்னாள் ராணுவ வீரர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
கடந்த 3ம் தேதி, விபத்தில் சிக்கி அடிபட்டு உயிரிழந்ததாக, போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடிகளான மணிகண்டன், 23, லோகேஸ்வரன், 23, மற்றும் ஸ்ரீராம், 20, ஆகிய மூவரை, சென்னை போலீசார் தேடி வந்தனர்.
இவர்கள், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த, பகவதிபட்டாபிராமபுரத்தில் பதுங்கியிருப்பது, போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, கடந்த 10ம் தேதி மேற்கண்ட மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு தங்க இடம் கொடுத்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 30, பிரசாந்த் 27 ஆகியோரையும் கைது செய்தனர்.
ரவுடிகள் மூன்று பேரிடமும், சில நாட்களாக சென்ற இடங்கள், செய்த செயல்கள் குறித்து, போலீசார் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதில், முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசனை வாகனம் ஏற்றி கொல்ல முயன்றதும், அது முடியாமல் போனதும் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, மணிகண்டன், லோகேஸ்வரன், ஸ்ரீராம், சதீஷ், பிரசாந்த் உள்ளிட்ட ஐவரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் நீதிமன்ற காவலில் எடுத்து திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதையறிந்த முத்துக்கெண்டாபுரத்தைச் சேர்ந்த கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது இந்த குற்றத்தில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். போலீசார் சமரசம் செய்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

