/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி எரிவாயு தகனமேடைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
/
பொன்னேரி எரிவாயு தகனமேடைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
பொன்னேரி எரிவாயு தகனமேடைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
பொன்னேரி எரிவாயு தகனமேடைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
ADDED : மே 03, 2024 01:14 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு, சின்னகாவணம், பஞ்செட்டி சாலை, பெரியகாவணம் ஆகிய இடங்களில் சுடுகாடு மற்றும் தகனமேடைகள் உள்ளன.
இங்கு சடலங்களை எரித்து இறுதி சடங்கு செய்யப்படுகிறது. சடலங்களை எரியூட்டும்போது, அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
இதை தவிர்க்க, 2022 கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.40 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள், 2,800 சதுரடி பரப்பில் மேற்கொள்ளப்பட்டன.
கட்டடத்திற்கான பணிகள் முடிந்து, அங்கு எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைப்போக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகளும் முடிந்தன.
சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின் இணைப்பு, சுற்றுச்சுவர், பாதை வசதி உள்ளிட்ட பணிகளும், கடந்தாண்டு ஜூலை மாதம் முடிந்தது.
நவீன எரிவாயு தகன மேடைக்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கிடைக்காமல், 10 மாதங்களாக திட்டம் பயனுக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம், எரிவாயு தகன மேடை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதனால், திட்டம் விரைவில் பயனுக்கும் வரும்.
தற்போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஜூன் 4ம் தேதிக்கு பின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.