/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகம்
/
இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகம்
இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகம்
இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகம்
ADDED : ஜூன் 11, 2024 04:54 AM
பொன்னேரி: பொன்னேரி தாலுக்கா அலுவலக சாலையில், சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பொன்னேரி தாலுக்காவிற்கு உட்பட்ட, 300க்கும் அதிகமான கிராமங்களின் பதிவுத்துறை அலுவலகமாக இது உள்ளது.
இங்கு, பத்திரப்பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்று, சங்கங்கள் பதிவு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே சமயம் மிகவும் குறுகலான இடத்தில் அலுவலகம் செயல்படுவதால், அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கணிணி பிரிவு, பத்திரப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு அறை ஆகியவை குறுகிய இடத்தில் அமைந்து உள்ளன.
சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் பணியாற்றும் பகுதியில், பத்திரப்பதிவு செய்பவர்கள் ஆவணம் சரிபார்ப்பு, புகைப்படம் எடுப்பது, கையெழுத்து பெறுவது, ஒப்புகை சீட்டு பெறுவது ஆகிய பணி மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள், அலுவலர்கள் சிரமம் கருதி, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.