/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பம் சேதம்: மின்சாரம் துண்டிப்பு
/
மின்கம்பம் சேதம்: மின்சாரம் துண்டிப்பு
ADDED : மே 10, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்,
கடம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே நெடுஞ்சாலையோரம் மழைநீர் கால்வாய் பணி நடந்து வருகிறது.
நேற்று காலை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது சாலையோரம் இருந்த மின்கம்பம் அருகிலிருந்த வீட்டின் மீது சாய்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த மின்வாரியத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பத்தை சீரமைத்து மாலையில் மின்சார வினியோகத்தை சீரமைத்தனர்.