/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய் சேதம் பராமரிப்பதில் பொ.ப., துறை அலட்சியம்

ADDED : ஜூன் 16, 2024 12:46 AM

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து புழல் ஏரிக்குச் செல்லும் பிரதான கால்வாய், பாக்கம் அருகில் மணல் அரிப்பால் சேதமடைந்துள்ளது. பொதுப்பணித்துறை அலட்சியத்தால், ஓராண்டாக சீரமைக்காமல், தண்ணீர் வீணாகி வருகிறது.
கொசஸ்தலை ஆற்றின் நடுவில், பூண்டியில் நீர்த்தேக்கம், அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால், நிரப்பப்பட்டு வருகிறது.
இங்கு சேகரமாகும் தண்ணீர், புழல் ஏரிக்கு பிரதான கால்வாய் வாயிலாகவும், சோழவரம் ஏரிக்கு 'பேபி கால்வாய்' வாயிலாகவும் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை நகருக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு பிரதான கால்வாய், 30 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால், பாக்கம் அருகில், புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய் மண் அரிப்பால் சேதமடைந்துள்ளது.
இந்த இடத்தில், தண்ணீர் வீணாகி வருகிறது. மண் அரிப்பால் சேதமான கால்வாயை, பொதுப்பணித்துறை-நீர்வளம், அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, பூண்டி பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையினர். உடனடியாக சேதமான கரையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.