/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து நேற்றும் மறியல்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து நேற்றும் மறியல்
ADDED : ஆக 02, 2024 07:16 AM
பொன்னேரி : மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, நேற்று பொன்னேரியில், இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கண்டன கோஷங்களுடன் சென்ற கட்சியினர், பொன்னேரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின், பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் மறியலை கைவிடவில்லை என்றால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதனால் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவள்ளூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, ஏழை, எளிய நடுத்தர மக்கள் வஞ்சிப்பு, மக்கள் மீது புதிய வரி விதிப்பு போன்ற பல்வேறுகோரிக்களை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து இ.கம்யூ., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் தலைமையில் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை கைது செய்து செய்தனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று திருத்தணி தபால் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.