/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்
ADDED : பிப் 22, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் சர்வதேச நாற்காலிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் மற்றும் பெங்களூரு 'மோட்டிவேஷன்' இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து, முதுகு தண்டுவடம் பாதித்த மற்றும் கடுமையான கால் ஊனத்தினால் பாதிக்கப்பட்டுள்ள, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கியது.
அதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன், மோட்டிவேஷன் இந்தியா நிறுவன திட்ட மேலாளர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

