/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சம்
/
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சம்
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சம்
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : ஜூலை 10, 2024 11:31 PM
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
குறிப்பாக, உப்பரபாளையம், பாலமுருகன் நகர், அன்னை இந்திரா தெரு, தடப்பெரும்பாக்கம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்து, சாலையோரங்களில் உள்ள குப்பை கழிவுகளில் உணவு தேடுகின்றன.
சில நாய்களுக்கு வெறிப்பிடித்து இருக்கின்றன. தெருச்சாலைகளில் நடந்து செல்லபவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டிசென்று கடிக்கின்றன.
இதுவரை, 20க்கும் அதிகமானவர்கள் நாய்கடிக்கு ஆளாகி உள்ளனர். மேற்கண்ட பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகள், ஒருஅரசு துவக்கப்பள்ளி, ஒரு அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.
இங்கு வந்து செல்லும் மாணவர்களையும் நாய்கள் விரட்டுவதால், அவர்கள் அங்கும் இங்கும் ஓடி கீழே விழுந்து சிராய்ப்புகளுக்கு ஆளாகின்றனர்.
வெறிநாய்களின் தொல்லையால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினமும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தெருவில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்து, நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
தற்போது பொன்னேரி நகராட்சி பகுதியில் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சியிலும், தெருநாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.