/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 31, 2024 11:11 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட, 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு ஓட்டுச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு ஓட்டுச் சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட துணை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள 3,665 ஓட்டுச்சாவடிகளுக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியல் தொடர்பாக கோரிக்கை மற்றும் ஆட்சேபனை இருந்தால், அனைத்து தாலுகா, சப் -கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.
அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடம், பட்டியல் வெளியிட்ட ஏழு நாட்களுக்குள் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல், சத்திய பிரசாத், தாசில்தார் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.