/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் பாலம் கட்டும் பணி துவக்கம்
/
புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் பாலம் கட்டும் பணி துவக்கம்
புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் பாலம் கட்டும் பணி துவக்கம்
புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் பாலம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஏப் 28, 2024 02:19 AM

பெரியபாளையம்:ஆந்திராவில் உருவாகி தமிழகத்தை நோக்கி பாய்ந்து வரும் ஆரணி ஆறு, 65.20 கி.மீ., துாரம் பயணித்து, தமிழகத்தில் ஊத்துக்கோட்டை, பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம் ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, இறுதியில் பழவேற்காடு அருகே மொத்தம், 66.40 கி.மீ., பயணித்து கடலில் கலக்கிறது.
இதில் பெரியபாளையம் அருகே, பாலேஸ்வரம் அணைக்கட்டு தாண்டி, புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் இடத்தில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கும்.
இதனால் புதுப்பாயம், காரணி, எருக்குவாய், நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும்.
இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, 20 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேம்பாலம் கட்டுமான பணி விரைந்து முடிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சிறுபாலத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு: பொன்னேரி அடுத்த சத்திரம் கிராமத்தில் இருந்து பெரும்பேடு செல்லும் சாலையில், மழைநீர் கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து, புதர் மண்டி உள்ளது.
சாலையின் வளைவுப்பகுதியில் இந்த சேதம் அடைந்த பாலம் இருப்பதால், வாகன ஓட்டிகள், தடுமாறுகின்றனர்.
இரவு நேரங்களில், கால்வாயில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த பாலம் குறுகலாக இருப்பதால், தனியார் பள்ளி வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் டிராக்டர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.
பாலம் பராமரிப்பு இன்றி கிடப்பதால், மழைக்காலங்களில், பெரும்பேடு ஏரிக்கு மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பாலம் சேதம் அடைந்தும், குறுகலாகவும் இருப்பதால், அதை முழுமையாக அகற்றி விட்டு, புதியது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

