ADDED : ஆக 27, 2024 11:59 PM
கடம்பத்துார், சுரங்கப் பாதை கேட்டு கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே, கடம்பத்துார் ரயில் பயணியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரயில் பயணியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் கடம்பத்துார் ரயில் பயணியர் சங்க செயலர் எம்.மூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கடம்பத்துார் ரயில் பயணியர் சங்க தலைவர் ஆர்.சேகர் பேசினார்.
கடம்பத்துார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கச்சிகூடா, பிருந்தாவன், கோவை, 'வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும்.
கடம்பத்துார் ரயில் நிலையத்தில் கருடாத்திரி, ஏலகிரி விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும். அனைத்து மின்சார ரயில்களையும் 12 பெட்டிகளாக இயக்க வேண்டும்.
ரத்து செய்யப்பட்ட கடம்பத்துார் - சென்னை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கடம்பத்துார் ரயில் நிலையத்தில் பயணியர் மற்றும் பகுதிவாசிகள் வந்து செல்லும் வகையில், சுரங்கப்பாதை வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.