/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்
/
ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்
ADDED : மே 09, 2024 01:18 AM
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சென்னை கடற்கரை நோக்கி புறநகர் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில், காலை 9:50 மணிக்கு சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், பொறுமை இழந்த ரயில் பயணியர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். காலை 11:15 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. திடீர் மறியல் போராட்டத்தால், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஒன்றரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த மறியலால், கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில், பரபரப்பான காலை நேரத்தில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது.
இதனால், எக்ஸ்பிரஸ் ரயில் பயணியர், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.