/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 09, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அமலதீபன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா முன்னிலை வகித்தனர்.
பயிற்சி கலெக்டர் ஆயுஷ் குப்தா பேரணியை துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, திருவள்ளூர் முக்கிய சாலை வழியாக, மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பதாகை ஏந்தி சென்றனர்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கள நீர் பரிசோதனை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.