/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் சேமிக்க 'புதுயுக்தி' குளமாக மாறிய ராஜா தெரு
/
மழைநீர் சேமிக்க 'புதுயுக்தி' குளமாக மாறிய ராஜா தெரு
மழைநீர் சேமிக்க 'புதுயுக்தி' குளமாக மாறிய ராஜா தெரு
மழைநீர் சேமிக்க 'புதுயுக்தி' குளமாக மாறிய ராஜா தெரு
ADDED : செப் 04, 2024 02:33 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் உள்ள முக்கிய தெருக்களில் ஒன்றாக ராஜா தெரு உள்ளது.
இத்தெரு வழியாக கவரைப்பேட்டை ரயில் நிலையம், அருள் நகர், தியாகராய தெரு, சண்முகா நகர் உள்ளிட்ட நகர்களுக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள இச்சாலை, 2019ம் ஆண்டு தார்ச்சாலையாக புதுப்பிக்கப்பட்டது.
கடந்தாண்டு மழை வெள்ளத்தின் போது, சாலை முழுதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.
தற்போது, அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இச்சாலையை கடந்து செல்லும் குடியிருப்புவாசிகள் மற்றும் ரயில் பயணியர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி, கவரைப்பேட்டை ராஜா தெருவை கான்கிரீட் சாலையாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.