/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் டோல்கேட் அருகில், தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது.
இதில், 200க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்., 5ம் தேதி தமிழகம் முழுதும் போராட்டம் நடைபெறும் என, சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.