/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொண்டாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கொண்டாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 23, 2024 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டாபுரம் ஒட்டர் காலனி. இங்கு, 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தை ஒட்டி, சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாட்டு குட்டைக்கு உரிய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர் செய்யப்படுவதாக, ஆர்.கே.பேட்டை வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார், வி.ஏ.ஓ., தாட்சாயிணி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்தில், நில அளவீடு செய்தனர்.
இதில், 2.86 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது. இது சுடுகாட்டு குட்டை வகைப்பாடு கொண்டது என, கண்டறியப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட இடத்தில், எச்சரிக்கை பதாகை நடப்பட்டுள்ளது.