/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
திருத்தணி மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தணி மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தணி மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஜூலை 23, 2024 12:59 AM
திருத்தணிதிருத்தணி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா துவங்கி 28ம் தேதி ஆடிப்பரணியும், 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் தெப்பத்திருவிழாவும், 30ம் தேதி இரண்டாம் தெப்பமும், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவுடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவடைகிறது.
ஐந்து நாட்கள் நடக்கும் விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு வந்து வழிப்படுவர்.
இந்நிலையில் மலைக்கோவிலுக்கு செல்லும் சன்னிதி தெரு, திருக்குளம் மற்றும் மலைப்படிகளில், நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் பாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு நடந்து செல்வதற்கு சிரமம் மற்றும் நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
இதையடுத்து திருத்தணி கோவில் அதிகாரிகள் தலைமையில், 10க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் சன்னிதி தெரு, திருக்குளம் மற்றும் மலைப்படிகள் ஆகிய இடங்களில் ஆக்கிரமித்த கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.