/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்தேக்கத்தில் தேன்கூடு அகற்றம்
/
பூண்டி நீர்தேக்கத்தில் தேன்கூடு அகற்றம்
ADDED : மே 25, 2024 11:58 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்தேக்கம், கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பூண்டி பகுதியில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாகுடிநீர் சேகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பூண்டி நீர்தேக்கத்தில் வெள்ளம் வந்ததால் அதை வெளியேற்றுவதற்காக, 16 மதகுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மதகுகளில், சமீபகாலமாக தேனீக்கள் கூடுகட்டி வருகின்றன.
இதையடுத்து பொதுப்பணித்துறையினர் தேன்கூடுகள் அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இதற்காக தேனீ சண்முகம் என்பவரை அழைத்து அதிரடியாக, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த தேன்கூடுகளை அகற்றினர்.
தேனீ சண்முகம் கூறியதாது:
தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட நீர்தேக்கத்தில் இது போன்று தேன் கூடுகள் இருப்பது சகஜம். இதை நான் எவ்வித பாதுகாப்பு கவசம் இன்றி அகற்றி வருகிறேன்.
எனக்கு தேனீக்கள் கடித்தால் எவ்வித உபத்திரம் வராது. தற்போது பூண்டியில் ஆறு இடங்களில் தேன்கூடுகள் அகற்றியுள்ளேன்.
மேலும், திருவள்ளளூர் அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள தேன்கூடுகள் அகற்ற பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.