/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய பேருந்து நிலைய கட்டுமான இடத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
புதிய பேருந்து நிலைய கட்டுமான இடத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
புதிய பேருந்து நிலைய கட்டுமான இடத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
புதிய பேருந்து நிலைய கட்டுமான இடத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : ஆக 09, 2024 01:11 AM

திருவள்ளூர்,:திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடைபெறும் இடத்தில், தேங்கிய மழைநீரை மோட்டார் வாயிலாக அகற்றும் பணி நடக்கிறது.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள திரு.வி.க., பேருந்து நிலையம் குறுகலாக உள்ளதால், அதற்கு மாற்றாக, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, வேடங்கி நல்லுாரியில், 5 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி, 33 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
தரைதளம்
இங்கு, 5,889 ச.மீட்டர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமையும். தரைதளம் மற்றும் மாடி என, 2,493 ச.மீட்டர் பரப்பில் பிரதான கட்டடம்; வெளியூர் பேருந்து, 45, நகர பேருந்து 11 என, 56 பேருந்துகள் நிறுத்த முடியும்.
மேலும், 107 கடைகள் இங்கு கட்டப்பட உள்ளன. 550 இருசக்கர வாகனங்கள், 16 கார்கள் நிறுத்தும் வசதியுடன் கட்டு மான பணி நடக்கிறது.
இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி போன்ற தென்மாவட்டத்திற்கும் நேரடி பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது.
வெளியேற்றம்
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக திருவள்ளூரில் தினமும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பேருந்து நிலைய கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால், பணி நடைபெறுவதில் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் தேங்கிய மழைநீர் மோட்டார் வாயிலாக வெளியேற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மழைநீர் முற்றிலும் அகற்றிய பின், பேருந்து நிலைய கட்டுமான பணி துவங்கும் என, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.