/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைத்த அரசு கட்டடம் ஒரே ஆண்டில் சீரழிவு
/
சீரமைத்த அரசு கட்டடம் ஒரே ஆண்டில் சீரழிவு
ADDED : மார் 09, 2025 03:07 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் காக்களூர் காலனியில், கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடம் உள்ளது. கடந்தாண்டு, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்திற்காக, பள்ளிப்பட்டு வந்த அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர், இந்த கட்டடத்தில் ஒருநாள் தங்கினார்.
இதற்காக, அந்த கட்டடம் இரவு பகலாக புனரமைக்கப்பட்டது. கட்டடத்தின் முன் கழிவுநீர் தேங்கியிருந்த பகுதியில் மண் கொட்டி சமன்செய்யப்பட்டது. புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்கபட்டது. குளிர்சாதன வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
அதன்பின், அந்த வளாகம் பராமரிப்பின்றி மீண்டும் சீரழிந்து வருகிறது. கட்டட வளாகத்தில் மீண்டும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால், அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சீரமைக்கப்பட்ட அரசு கட்டடத்தை மீண்டும் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.