/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் பழுது
/
பூதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் பழுது
பூதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் பழுது
பூதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் பழுது
ADDED : ஜூன் 08, 2024 10:58 PM

சோழவரம்: சோழவரம் அடுத்த, பூதுார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சோழவரம், பூதுார், மாரம்பேடு, ஒரக்காடு, அருமந்தை, மாபூஸ்கான்பேட்டை, கும்மனுார், வழுதிகைமேடு, விச்சூர், வெள்ளிவாயல், அட்டப்பாளையம் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு தினமும், 300 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகள் மகப்பேறு காலங்களில் சுகாதார நிலையத்தில் தங்கி குழந்தைபேறு பெறுகின்றனர்.
பூதுாரை சுற்றியுள்ள கிராமங்களின் நோய் தீர்க்கும் மையமாக இது அமைந்து உள்ளது. அதே சமயம், இங்கு போதிய வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இங்குள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து கிடப்பதால், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால், சுகாதார நிலைய வளாகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள், மகப்பேறுவிற்கு தங்கியிருக்கும் கர்ப்பிணியர் மின்விளக்கு, பேன் வசதியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கட்டடங்களும் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கழிப்பறை வசதிகளும் குறைவாக உள்ளது.
பழுதான ஜெனரேட்டரை சீரமைக்கவும், போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடிக்கடி மின்தடை
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பத்துார், பிரையாங்குப்பம், காரணி, வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் உட்பட பல பகுதிகளில் அறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
மின்தடை எப்போது நடைபெறும் என்று தெரியாமல் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வதும் பாதிக்கப்படுகிறது.
இதனால், பகுதிவாசிகள் குடிநீரின்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் செவ்வாப்பேட்டை பகுதியிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அறிவிப்பில்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கவும், மின் வினியோகம் சீரமைக்கவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.