/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியகளக்காட்டூர் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
/
பெரியகளக்காட்டூர் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
பெரியகளக்காட்டூர் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
பெரியகளக்காட்டூர் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 11:29 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசியர் ஒரு ஆசிரியர் என இருவர் பணியில் இருந்தனர். கடந்தாண்டு தலைமையாசிரியர் பணி மாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு சென்றார். பின் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை.
இதனால் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இனால் பெற்றோர் இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதை தவிர்த்துள்ளனர்.
இந்நிலையில் தற்போதுள்ள மாணவர்களின் நலன் கருதியும் வரும் கல்வியாண்டில் சேர்க்கை குறையாமல் அதிகரிக்கவும் பெரியகளக்காட்டூர் பள்ளிக்கு தலைமையாசிரியரை நியமிக்க திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.