/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய ரேஷன் கடை கட்டடம் பனப்பாக்கத்தில் கட்ட கோரிக்கை
/
புதிய ரேஷன் கடை கட்டடம் பனப்பாக்கத்தில் கட்ட கோரிக்கை
புதிய ரேஷன் கடை கட்டடம் பனப்பாக்கத்தில் கட்ட கோரிக்கை
புதிய ரேஷன் கடை கட்டடம் பனப்பாக்கத்தில் கட்ட கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 12:50 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 240 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்குள்ள ரேஷன் கடை கட்டடம், 25ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது சேதம் அடைந்து உள்ளது.
கட்டடத்தின் கூரைகளில் சிமென்ட் பூச்சுக்கள் கொட்டி உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. ஆங்காங்கே உள்ள விரிசல்களால் கட்டடத்தின் உறுதிதன்மை பாதித்து உள்ளது.
மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால், உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருட்கள் நனைந்து வீணாகின்றன. ரேஷன் பொருட்களை வாங்க வரும் கிராமவாசிகள் கட்டடத்தின் நிலையை கண்டு அச்சமடைகின்றனர்.
கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அங்கு வந்து செல்லும் குடும்ப அட்டைதாரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மேற்கண்ட ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
l திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இல்லாததால், பெண்கள் இயற்கை உபாதையை திறந்த வெளியில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.