/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
/
பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : செப் 15, 2024 01:01 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி. இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது.
இதன் நான்கு துாண்களும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
குடியிருப்பு அருகே உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்கிறது.
எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
பராமரிப்பில் அலட்சியம்
திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கொரட்டூர் ஊராட்சி.
இங்கு 2வது வார்டு பகுதியில் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீரத்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் மேல்நிலை நீர்ததேக்க தொட்டி ஆங்காங்கே சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொரட்டூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.