/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை
/
இடிந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2024 11:14 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த பள்ளி வகுப்பறை கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. இதனால், மாணவர்களுக்கு சிறப்பான கட்டட வசதி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், பள்ளி சுற்றுச்சுவர் நுழைவாயில் பகுதியில் இடிந்து கிடக்கிறது. இரும்பால் செய்யப்பட்ட வாயிற் கதவும் அங்கேயே கிடத்தப்பட்டுள்ளது.
இதனால், பள்ளியின் புதிய கட்டடத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
நொச்சிலியில் இருந்து கே.ஜி.கண்டிகை வழியாக திருத்தணி செல்லும் சாலையில் இந்த பள்ளி வளாகம் அமைந்துள்ளது. மேலும், பிடிமானம் இன்றி கிடத்தப்பட்டுள்ள இரும்பு கதவு சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுச்சுவரை சீரமைக்கவும், வாயிற்கதவை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.