/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பேரில் இயற்கை உரம் தயாரிக்க கோரிக்கை
/
திருப்பேரில் இயற்கை உரம் தயாரிக்க கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 02:23 AM

பூண்டி:பூண்டி ஒன்றியம் திருப்பேர் ஊராட்சியில் இயற்கை உரம் மற்றும் மண்புழு தயாரிக்க 2017 -- 18ம் ஆண்டு 1 லட்சம் ரூபாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டு உரம் தயாரிப்பு நடந்து வந்தது.
அதன் வாயிலாக திருப்பேர் கிராமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்த நிலையில், கொரோனாவுக்கு பின் இந்த உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. இதனால், மண்புழு உரம் தயாரிக்கும் இடம் பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது.
தற்போது விவசாயிகள் நவரை பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் மண்புழு இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் வாயிலாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.