ADDED : ஜூன் 12, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு, ஜூன் 13–
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர், கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, களாம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், ஏராளமான விவசாயிகள், இயந்திர நடவு மூலம் நெல் மகசூல் செய்கின்றனர்.
ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், குறு, சிறு விவசாயிகள் கூட, தற்போது இந்த முறைக்கு மாறி வருவதாக கூறுகின்றனர்.
இயந்திர நடவு செய்யும் நெல் விவசாயிகளுக்கு, களையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால், களையை கட்டுப்படுத்தும் ‘கோனோவீடர்’ கருவியை மானிய விலையில் வழங்க, வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவாலங்காடு பகுதி விவசாயிகள் கோரிக்கை விருத்துள்ளனர்.
