/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கம் சாலையோரம் செடிகள் அகற்ற கோரிக்கை
/
பேரம்பாக்கம் சாலையோரம் செடிகள் அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 21, 2024 11:23 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு-- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலை 14 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில், மணவூர் பாகசாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை வழியாக தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன.
அதேபோன்று களாம்பாக்கம் சின்னமண்டலி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் மணவூர் ரயில் நிலையத்திற்கு வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த சாலை 20 அடி மட்டுமே கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை குறுகி காணப்படுகிறது.
தற்போது இந்த சாலையில் மணவூர், எல்விபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் செடிகள் முளைத்து உள்ளன.
இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் வளைவு சாலைகளில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரத்தில் முளைத்து வரும் செடிகளை அகற்றவும் சாலையை இப்பகுதியில் விரிவுபடுத்தவும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.