/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரெட்டிப்பாளையத்தில் சாலையோர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
/
ரெட்டிப்பாளையத்தில் சாலையோர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
ரெட்டிப்பாளையத்தில் சாலையோர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
ரெட்டிப்பாளையத்தில் சாலையோர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 31, 2024 02:42 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில், கடந்த, 2015ல் ஆரணி ஆற்றின் கரை உடைந்து, அருகில் இருந்த, மாநில நெடுஞ்சாலையும், 100மீ. தொலைவிற்கு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது.
அதையடுத்து அப்பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி இருபுறமும் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டன.
இவை சரிவர பொருத்தப்படாததால், ஒவ்வொன்றாக கழன்று விழுந்தன. தற்போது அவை முற்றிலும் சேதம் அடைந்து பயனற்று கீழே விழுந்து கிடக்கின்றன.
இரும்பு தளவாடங்களில் சில, மாயமாகியும் உள்ளன. கீழே விழுந்து கிடக்கும் இரும்பு தளவாடங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுத்துகின்றன.
இரவு நேரங்களில் இதில் சிக்கி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, மேற்கண்ட பகுதியில் சேதம் அடைந்த சாலையோர தடுப்புகளை சீரமைத்து, அதில் ஒளிரும் விளக்கும் பொருத்தவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.