/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின்இணப்பு வழங்க கோரிக்கை
/
விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின்இணப்பு வழங்க கோரிக்கை
விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின்இணப்பு வழங்க கோரிக்கை
விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின்இணப்பு வழங்க கோரிக்கை
ADDED : மார் 13, 2025 10:48 PM
திருத்தணி:திருத்தணி -- அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடந்தது.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில், திருத்தணி கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர் மனு அளித்தனர்.
ஆர்.கே.பேட்டை புதுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், புதிய மின்கம்பங்கள் நட்டு விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
மேலும் வருவாய் கோட்ட விவசாயிகள் விவசாய மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும். கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என திருத்தணி பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.