/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்த்தேக்க தொட்டி சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
நீர்த்தேக்க தொட்டி சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2024 02:33 AM

பூண்டி:பூண்டி ஒன்றியம், ராமஞ்சேரி ஊராட்சியில், 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக விஷ்ணு சோமநாதஸ்வரர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஓராண்டாக சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விரிசல் அடைந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
மேலும், குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமென்ட் பூச்சுக்கள் அவ்வப்போது உதிர்வதால், குடியிருப்பு வாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.
எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.