/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடைகள் இடமாற்ற கோரி ஆர்.டி.ஓ.,விடம் பகுதிவாசிகள் மனு
/
டாஸ்மாக் கடைகள் இடமாற்ற கோரி ஆர்.டி.ஓ.,விடம் பகுதிவாசிகள் மனு
டாஸ்மாக் கடைகள் இடமாற்ற கோரி ஆர்.டி.ஓ.,விடம் பகுதிவாசிகள் மனு
டாஸ்மாக் கடைகள் இடமாற்ற கோரி ஆர்.டி.ஓ.,விடம் பகுதிவாசிகள் மனு
ADDED : ஜூன் 15, 2024 09:15 PM
திருத்தணி:திருத்தணி புதிய புறவழிச்சாலை அருகே இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் கடைகள் அகற்ற வேண்டும் என வள்ளியம்மாபுரம் மற்றும் ராஜகணபதி குடியிருப்பு மக்கள் மாவட்ட கலால் உதவி ஆணையர் மற்றும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருத்தணி கார்த்திகேயபுரம் ஏரி மற்றும் திருத்தணி புதிய புறவழிச்சாலை அருகே இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த டாஸ்மாக் கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு புறவழிச்சாலையில் அமர்ந்து மதுகுடிக்கின்றனர்.
மேலும் புறவழிச்சாலை அருகே ராஜகணபதி குடியிருப்பு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.
குடிமகன்களால், குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், பள்ளி மாணவர்கள் தினமும் அவதிக்குள்ளாகி தவிக்கின்றனர். மேலும், டாஸ்மாக் கடைக்கு வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மது அருந்தி விட்டு, வாகனங்கள் ஓட்டிச் செல்வதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி 2023ம் ஆண்டு முதல் தொடர்ந்து மேற்கண்ட பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.