/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திருத்தணி சார் -- பதிவாளர் அலுவலகம்

ADDED : ஆக 04, 2024 02:33 AM

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், சார்- - பதிவாளர் அலுவலகம் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. மேலும் அலுவலகம் குறுகிய இடத்தில் இயங்கி வந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து திருத்தணி பொதுப்பணித்துறையினர், பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றினர்.
தொடர்ந்து, அதே இடத்தில், 1.63 கோடி ரூபாயில் புதிய சார்- - பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி துவங்கி முழுமையாக முடிந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய சென்னை சாலையில் தனியார் வாடகை கட்டடத்தில் குறுகிய இடத்தில் திருத்தணி சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டடத்தில் அலுவலகம் இயங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.