/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் முதலிடம்
/
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் முதலிடம்
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் முதலிடம்
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் முதலிடம்
ADDED : மே 02, 2024 09:21 PM

சென்னை:ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 18வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
தி.நகர், வெங்கட்நராயணா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மைதானத்திலும், பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்திலும், போட்டிகள் நடந்தன.
ஆண்களுக்கான கடைசி லீக் ஆட்டங்களில், எஸ்.டி.ஏ.டி., அணி, 79 - 70 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணியையும், இந்தியன் வங்கி அணி, 68 - 56 என்ற கணக்கில் ஐ.சி.எப்., அணியையும் தோற்கடித்தன. அதேபோல், பெண்களில் எஸ்.டி.ஏ.டி., அணி 68 - 47 என்ற கணக்கில் ஜெ.ஐ.டி., அணியையும், ரைசிங் ஸ்டார் அணி, 70 - 62 என்ற கணக்கில் இந்துஸ்தான் அணியையும் வீழ்த்தின.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் இந்தியன் வங்கி முதலிடத்தையும், ஐ.சி.எப்., - எஸ்.டி.ஏ.டி., மற்றும் எஸ்.ஆர்.எம்., அணிகள் அடுத்தடுத்த இடங்களையும் வென்றன.
பெண்களில், ரைசிங் ஸ்டார் முதலிடத்தையும், இந்துஸ்தான் இரண்டாம் இடத்தையும், எஸ்.டி.ஏ.டி., மற்றும் ஜெ.ஐ.டி., அணிகள், மூன்று மற்றும் நான்காம் இடங்களை பெற்றன.