/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றுப்பாலத்தின் அணுகு சாலையோரம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
ஆற்றுப்பாலத்தின் அணுகு சாலையோரம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ஆற்றுப்பாலத்தின் அணுகு சாலையோரம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ஆற்றுப்பாலத்தின் அணுகு சாலையோரம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மார் 25, 2024 06:14 AM

பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், சின்னகாவணம் - திருவாயற்பாடி இடையே உள்ள ஆரணி ஆற்றுப்பாலத்தின் வழியாக, 100க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர்.
நாள் முழுதும் வாகன போக்குவரத்து உள்ள சாலையாக இது உள்ளது. இந்த பாலத்தின் அணுகு சாலைகளின் இருபுறமும், 15 அடி ஆழமான ஆற்றின் கரையோர பகுதிகள் உள்ளன.
அணுகு சாலை பகுதியின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளன. இப்பகுதியில் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை.
இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்களின் கண்கூசும் வெளிச்சத்தினால் நிலை தடுமாறுகின்றனர்.
வாகனத்தை இடதுபுறமாக கொண்டு செல்லும்போது, சாலையோர பள்ளங்களில் தவறி விழும் நிலை ஏற்படுகிறது.
இதனால், அணுகு சாலை பகுதியில் விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் உள்ளது.
அதை தவிர்க்க, மேற்கண்ட பகுதியில் இருபுறமும், இரும்பு தடுப்புகள் மற்றும் ரிப்ளக்டர்கள் பொருத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.