/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் பேருந்து பணிமனை சாலையில் விபத்து அபாயம்
/
சோளிங்கர் பேருந்து பணிமனை சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 09, 2024 11:05 PM

ஆர்.கே.பேட்டை,: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மீசரகாண்டாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது சோளிங்கர் பேருந்து பணிமனை. இந்த பணிமனையில் இருந்து வேலுார், ராணிப்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிமனைக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. பணிமனைக்கு பேருந்து செல்லும் போது எதிர் திசையில் இருந்து எந்தவொரு வாகனமும் வர முடியாத நிலை உள்ளது.
இதனால், இந்த சாலை வழியாக அனுமன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், இந்த தெருவில் வசிப்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலையின் ஓரம் சமீபத்தில் திறந்தநிலை கழிவுநீர் கால்வாய், கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், இந்த வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையில், இருந்து வாலாஜா சாலைக்குள் பேருந்துகள் திரும்பும் பகுதியிலும் எந்தவித எச்சரிக்கை பதாகையும் இல்லாததாலும், விபத்து அபாயம் நிலவுகிறது. பேருந்து பணிமனைக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.