/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர தடுப்புகள் மாயம் ரெட்டிப்பாளையத்தில் அட்டூழியம்
/
சாலையோர தடுப்புகள் மாயம் ரெட்டிப்பாளையத்தில் அட்டூழியம்
சாலையோர தடுப்புகள் மாயம் ரெட்டிப்பாளையத்தில் அட்டூழியம்
சாலையோர தடுப்புகள் மாயம் ரெட்டிப்பாளையத்தில் அட்டூழியம்
ADDED : மார் 10, 2025 11:52 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த ஆலாடு, சிவபுரம், கொளத்துார், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி கிராமங்கள் வழியாக,தத்தமஞ்சி செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. ரெட்டிப்பாளையம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி இச்சாலை அமைந்துள்ளது.
கடந்த 2015ல்,ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைபகுதிகள் உடைந்தது.
இதில், பொன்னேரி - தத்தமஞ்சி சாலையும், 100 மீ., தொலைவிற்கு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது.
அங்கு, 3 அடி உயரத்தில் புதிய சாலை அமைத்து, இருபுறமும் இரும்புதடுப்புகள் பொருத்தப் பட்டன.
இந்த இரும்பு தடுப்புகள் அவ்வப்போது சேதமடைந்து வந்தன. தளவாடங்கள் கழன்று கீழே விழந்தன. அவற்றை உடனடியாக சீரமைக்க தவறியதால் மாயமாகி வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். தடுப்புகள் இல்லாத பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த மீதமுள்ள தளவாடங்களும் மாயமாகும் முன், அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என,வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.