/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணியில் கூரையில்லாத காய்கறி சந்தை ' ஷெட்'
/
ஆரணியில் கூரையில்லாத காய்கறி சந்தை ' ஷெட்'
ADDED : ஜூலை 09, 2024 06:31 AM

கும்மிடிப்பூண்டி: ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், கத்திரி, வெண்டை, முள்ளங்கி, கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான கிராம விவசாயிகள் காய்கறி, கீரை சாகுபடி மட்டுமே பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு விளைவிக்கும் காய்கறிகளை, ஆரணியில் உள்ள மல்லியன்குப்பம் சாலை சந்திப்பில் வைத்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
தினசரி அதிகாலை நேரத்தில், அங்கு கூடும் காய்கறி சந்தையால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படும்.
விவசாயிகளின் நலன் கருதி, சாலையின் ஓரம் ஆரணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், காய்கறி சந்தைக்கான இரும்பு ஷெட் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த ஷெட், தற்போது கூரை இன்றி எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. ஷெட் முழுதும் துருப்பிடித்துள்ளது.
ஆரணி பகுதி விவசாயிகளின் நலன் கருதி, காய்கறி சந்தைக்கான புதிய ஷெட் ஒன்றை அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.